ராபர்ட் ஏனன்
- மண்ணில் : 1834
- விண்ணில் : 1867
- ஊர் : டண்டி
- தரிசன பூமி :
- நாடு : ஸ்காட்லாந்து
∆ அது ஒரு புதன்கிழமை காலை 4 மணிக்கே எழுந்துவிட்டார் ராபர்ட் ஏனன். நீண்ட நேரம் தனது ஊழியத்தினால் தொடப்பட்டவர்களுக்காக ஜெபித்துக் கொண்டிருந்தார்
∆ பிறகு வேலைக்குச் செல்லும்படியாக புறப்பட்ட அவர் தன் கையில் ஒரு சுண்ணாம்புக் கட்டியை எடுத்துக் கொண்டார் வீட்டை விட்டு வெளியேறும்போது வாசலில் மரணம் என்று எழுதிவைத்தார். வாசலுக்கு வெளியே தரையில் நித்தியம் என்று எழுதி வைத்தார்
அன்று அவர் துறைமுகத்துக்கு அருகே ஒரு கட்டுமான பணியில் வேலை செய்ய வேண்டியிருந்தது
நடுப்பகல் நேரம். திடீரென்று ஒரு கூக்குரல் எழுந்தது. ராபர்ட் ஓடிச் சென்று வெளியே பார்த்தார். 11 வயது பையன் கப்பலிலிருந்து தவறி விழுந்து, கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தான்.
∆ அவனைக் காப்பாற்ற முடியாமல் மக்கள் திகைத்துக் கொண்டிருந்தனர் இவர் கொஞ்சமும் தயங்கவில்லை. அவனைக் காப்பாற்றும்படி கடலில் குதித்தார்
சிறந்த நீச்சல் வீரரான இவர். ஏற்கனவே ஒருமுறை ஒரே நாளில்
இரண்டு பேரை காப்பாற்றியிருக்கிறார்.
∆ மூழ்கிக் கொண்டிருந்த சிறுவனைக் காப்பாற்றி கப்பலின் அருகில் கொண்டுவந்தார். மற்றவர்கள் கைநீட்டி அவனை வாங்கிக் கொண்டார்கள் அந்தோ ராபர்ட் டால் கரையேற முடியவில்லை. திடீரென்று பாய்ந்து வந்த அலையால் அவர் அடித்துச் செல்லப்பட்டார் சிறுவனின் உயிரைக் காப்பாற்றி, இவர் தன் உயிரை இரட்சகரின் கையில் ஈந்தளித்தார். ராபர்டின் மரணம் டேன்டீ பட்டணத்தையே உலுக்கியது
∆ இதுவரை அவருடைய பிரசங்கங்களை கேட்டு அலட்சியமாக இருந்த மக்கள்
நித்தியத்தைக் குறித்து சிந்திக்க ஆரம்பித்தனர். ராபர்டின் மரணம் பலரை
கிறிஸ்தவ ஜீவியத்திற்குள் கொண்டு வந்தது தனக்குக் கொடுக்கப்பட்டிருந்த கொஞ்ச காலத்திலும் எந்தவொரு மணித்துளியையும் வீணாக்காமல், தொடர்ந்து ஊழியம் செய்தவர். சுவிசேஷ வாஞ்சையினால் கொழுந்துவிட்டு எரிந்தவர். சிறந்த ஆத்தும ஆதாய வீரராகத் தன் காலத்தை முடித்தார் ராபர்ட்